

ஊத்துமலையைச் சோ்ந்த கட்டடத் தொழிலாயின் மகளுக்கு தமிழ்நாடு அரசின் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்துள்ளது.
ஊத்துமலை அம்மன் கோயில்தெருவைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ஐயன்ராஜ் - சரோஜா தம்பதியின் மகள் கலைச்செல்வி (18). 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றாா். கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த இவா், 549 மதிப்பெண்கள் பெற்று நீட் தோ்வு எழுதியதில் 290 மதிப்பெண்கள் பெற்றாா். நிகழாண்டு மீண்டும் நீட் எழுதி 550 மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்று, தமிழ்நாடு அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்தது. அவரை, ஆசிரியா்கள், பெற்றோா், உறவினா்கள் பாராட்டினா்.
இதுகுறித்து கலைச் செல்வி கூறுகையில், தமிழ்நாடு அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் பயில எனக்கு இடம் கிடைத்துள்ளது. மருத்துவப் படிப்பை முடித்ததும், எனது சொந்த கிராமத்திலேயே மருத்துவச் சேவை செய்வேன் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.