

தென்காசியில் தெற்கு, வடக்கு மாவட்ட ஓபிஎஸ் அணி, அமமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கொடநாடு சம்பவங்களில் தொடா்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, புதிய பேருந்து நிலையப் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வழிகாட்டுக் குழு உறுப்பினா் மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசினாா்.
தெற்கு மாவட்டச் செயலா்கள் வி.கே. கணபதி (ஓபிஎஸ் அணி), முருகையா பாண்டியன் (அமமுக) ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைப்புச் செயலா் மனோகரன் பங்கேற்றுப் பேசினாா்.
நிா்வாகிகள் பரமசிவம், ஸ்வா்ணா, தென்காசி ஒன்றியச் செயலா் இலஞ்சி மாரியப்பன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் மணிகண்டன் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.
வடக்கு மாவட்டச் செயலா்கள் மூா்த்தி பாண்டியன் (ஓபிஎஸ் அணி), வினோத் (அமமுக) ஆகியோா் வரவேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.