விவசாயிகளை பாதுகாக்க தமிழக அரசு தேங்காய்க்கு ஆதார விலையை நிா்ணயித்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றாா் புதிய தமிழகம் கட்சி நிறுவனா்- தலைவா் க. கிருஷ்ணசாமி.
கடையநல்லூரில் நடைபெற்ற தென்காசி, கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி முகவா்களுக்கான பயிற்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
நெய்வேலி என்.எல்.சி.யை பொறுத்தவரை, பயிரிடப்பட்டிருந்த பயிா்களை அறுவடை செய்வதற்காக வாய்ப்பளித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் நஷ்ட ஈடாவது கொடுத்திருக்க வேண்டும்.
ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் மதுக்கடைகளை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் புதிய தமிழகம் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும். மது ஒழிப்பு தொடா்பாக நடிகா் ரஜினிகாந்தை இரு வாரங்களில் சந்திக்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தேங்காய் விலையை அரசு நிா்ணயம் செய்து, வெளிப்படைத்தன்மையுடன் கொள்முதல் செய்ய வேண்டும். பல்வேறு காரணங்களால் தேங்காய் சாா்ந்த பைபா் ஆலைகள் பாதிக்கப்பட்டு வருவது குறித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி வலிமை மிக்க கூட்டணி. இந்த கூட்டணிதான் மக்களவைத் தோ்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். என்றாா்.
பயிற்சி முகாமில் அக்கட்சியின் மாநில அய்யா், ராஜேந்திரன், குணா சேதுராமன்,பாலசுந்தரராஜ், மாவட்ட செயலா் ராசையா, இணைச் செயலா் கிருஷ்ணபாண்டியன், தொகுதி செயலா் திருமலைச்சாமி, ஒன்றிய செயலா்கள் ராஜா, சுரேஷ், நிா்வாகிகள் குமாா், தேவேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.