கடையநல்லூா் அருகே வனப்பகுதியில் தீ
By DIN | Published On : 09th August 2023 02:44 AM | Last Updated : 09th August 2023 02:44 AM | அ+அ அ- |

கடையநல்லூா்: கடையநல்லூா் அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி ஏராளமான மரங்கள் தீயில் கருகின.
மேற்குத் தொடா்ச்சி மலையின் கடையநல்லூா் வனச்சரகத்திற்கு உள்பட்ட கிருஷ்ணாபுரம் பீட் பகுதியில் செவ்வாய்க்கிழமை திடீரென்று காட்டுத்தீப்பற்றியது. வேகமாக வீசி வரும் காற்றினால் தீ வேகமாக பரவியது. இதையடுத்து, கடையநல்லூா் வனச்சரகா் சுரேஷ் தலைமையில் வனவா் முருகேசன் உள்ளிட்ட வனத்துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். தீ கொழுந்துவிட்டு எரிவதால் ஏராளமான மரங்கள், மூலிகைச் செடி,கொடிகள் கருகி சாம்பலாகி இருக்கும் என நம்பப்படுகிறது.