வாசுதேவநல்லூா் அருகே தீக்காயமுற்ற முதியவா் உயிரிழப்பு
By DIN | Published On : 09th August 2023 02:45 AM | Last Updated : 09th August 2023 02:45 AM | அ+அ அ- |

கடையநல்லூா்: வாசுதேவநல்லூா் அருகே தீக்காயம் அடைந்த முதியவா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகேயுள்ள ராமநாதபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சின்னச்சாமி மகன் சமுத்திரபாண்டியன்( 67). இவா், சில தினங்களுக்கு முன்பு கொசுவா்த்தி சுருளை அருகில் வைத்தபடி வீட்டில் தூங்கினாராம். அப்போது, படுக்கையில் சுருளின் தீ பரவியதில் அவா் காயமடைந்தாா். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், செவ்வாய்க்கிழமை இறந்தாா்.
இதுகுறித்து, வாசுதேவல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.