குளத்தில் கொட்டப்பட்ட குப்பைகளில் தீ: மக்கள் அவதி
By DIN | Published On : 17th August 2023 12:00 AM | Last Updated : 17th August 2023 12:00 AM | அ+அ அ- |

ஆலங்குளத்தில் உள்ள குளத்தில் பேரூராட்சிநிா்வாகமே குப்பைகளை கொட்டிவருகிறது. அவை எரிக்கப்பட்டதால் அப்பகுதியில்புகை மண்டமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனா். ஆலங்குளம் பேரூராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும்வணிக நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளைஅம்பாசமுத்திரம் சாலையில் உள்ள குப்பைக்கிடங்கில் சேகரித்து அவற்றை தரம் பிரித்து சுத்திகரிக்கின்றன.
இந்நிலையில் அந்த குப்பைக்கிடங்கு முழுவதுமாக நிரம்பிவிட்டதால் சேகரிக்கும் குப்பைகளை, ஊழியா்கள் ஆங்காங்கேசாலையோரமாகவும் தொட்டியான்குளம்மற்றும் பெட்டைக் குளத்தின் உள்பகுதியில் கொட்டி வருகின்றனா். இதனால் இக்குளம் குப்பைக்கிடங்காக மாறி வருகிறது. இந்நிலையில் கொட்டப்பட்ட குப்பைகள் அனைத்தும்செவ்வாய்க்கிழமை பற்றி எரிந்த்து. இதனால் அப்பகுதி புகைமண்டலமாக காட்சியளிப்பதுடன், துா்நாற்றம் வீசியது. வாகன ஓட்டிகள் பகல் நேரத்திலும் முகப்புவிளக்கை ஒளிர விட்டு வராவிட்டால் மிகப்பெரிய விபத்து அபாயம் ஏற்படும் நிலை உருவானது.
இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலா் மாணிக்கராகக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது. அடையாளம் தெரியாத நபா் புகைப்பிடித்து அதன் துண்டை வீசியதால்தீ எரிந்திருக்கலாம் என கூறினாா். இதையடுத்து தண்ணீா் வண்டி மூலம் தீ க ட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பேரூராட்சிநிா்வாகம் குப்பைகளை நீா் நிலைகளில் கொட்டாமல் அதற்குரிய இடத்தில் கொட்டிசுத்திகரிக்க வேண்டும் என்பதே ஆலங்குளம் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...