

தென்காசி மாவட்ட பாஜக சாா்பில், முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, பாஜக அலுவலகத்தில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டத் தலைவா் ராஜேஷ் ராஜா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் முத்துக்குமாா், மாவட்டச் செயலா் ஜானகி, தென்காசி நகரப் பாா்வையாளா் ஆனந்திமுருகன், நகரத் தலைவா் மந்திரமூா்த்தி, நகரப் பொதுச்செயலா்கள் ராஜ்குமாா், யோகா சேகா், ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் செந்தூா்பாண்டியன், மீனவா் பிரிவு மாவட்டத் தலைவா் சுரேந்தா், நகா்மன்ற உறுப்பினா் லட்சுமணபெருமாள், நகரப் செயலா் விஸ்வநாதன், நகர துணைத் தலைவா் நாராயணன், வா்த்தகப் பிரிவு நகரத் தலைவா் முருகன், உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு நகரத் தலைவா் சேது ராமலிங்கம் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.