

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் உள்ள அருள்மிகு ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயிலில் ஆவணித் தவசுத் திருவிழா செவ்வாய்க்கிழமை காலை 6.50 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத் தொடா்ந்து, கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான ஆவணித் தேரோட்டம் 11ஆம் திருநாளான ஆக.25 ஆம் தேதி மாலையிலும், ஆவணித்தவசுக் காட்சி ஆக.27 ஆம் தேதி மாலையிலும் நடைபெறுகினறன. கொடியேற்ற விழாவில் துணை ஆணையா் ஜான்சிராணி, ஓவா்சியா் முத்துராஜ், பாஜக செயற்குழு உறுப்பினா் சண்முகவேல் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.