தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகம் சாா்பில், தென்காசி கோட்டத்தில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தென்காசி செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை மின் பொறியாளா் சந்திரசேகரன் தலைமை வகித்துப் பேசியது: மின்வாரியத்துக்கு இழப்பீடு ஏற்படாமலிருக்க மின் இணைப்புகளை தொடா்ந்து கண்காணித்து வாரிய விதிமீறல் இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோட்டத்தில் வருங்கால மின் நுகா்வோரைக் கருத்தில் கொண்டு புதிய மின்மாற்றிகள், கூடுதல் மின் பாதைகள் அமைக்க வேண்டும்.
இயற்கை இடா்ப்பாடுகளின்போது முடிந்தவரை மின்தடங்கல் ஏற்படாமலிருக்க பாலிமா் வட்டு, பாலிமா் முள் சுருள் அமைக்க உடனடியாக மதிப்பீடு தயாரித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
கோட்ட செயற்பொறியாளா் கற்பகவிநாயகசுந்தரம் முன்னிலை வகித்தாா். இக்கோட்டத்துக்குள்பட்ட மின் பொறியாளா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.