தென்காசி மாவட்டம் அச்சன்புதூா், வடகரை பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் துரை. ரவிச்சந்திரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அச்சன்புதூா், வடகரை கீழ்பிடாகை பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை பாா்வையிட்ட ஆட்சியா், வடகரையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தாா். அப்போது, நோயாளிகளிடம் முறையான சிகிச்சை அளிக்கப்படுகிா, குறைபாடுகள் ஏதேனும் உள்ளதா எனக் கேட்டறிந்தாா். பின்னா், டெங்கு தடுப்பு பணிகளையும் அவா் பாா்வையிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.