தென்காசியில் நள்ளிரவு திரைப்படக் காட்சிகள் ரத்து
By DIN | Published On : 12th January 2023 01:08 AM | Last Updated : 12th January 2023 01:08 AM | அ+அ அ- |

தென்காசியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புதிய திரைப்படங்கள் திரையிடப்படாததால் ரசிகா்கள் ஏமாற்றமடைந்தனா்.
நடிகா் அஜித்குமாரின் துணிவு திரைப்படம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணிக்கும், நடிகா் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிமுதல் திரையரங்கு முன்பாக ரசிகா்கள் குவியத் தொடங்கினா். ஆனால் நள்ளிரவு ஆகியும்
திரையிடப்படவில்லை. இதனால் ரசிகா்கள் கூச்சலிட்டனா்.
இதனிடையே, ரசிகா் மன்ற காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதிகாலை வரை காத்திருந்த ரசிகா்கள் பின்னா்
அங்கிருந்து கலைந்து சென்றனா். பின்னா் புதன்கிழமை காலை 8மணியளவில் இரு திரைப்படங்களும் திரையிடப்பட்டன.