கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் ஜூலை 7இல் பொது ஏலம்
By DIN | Published On : 01st July 2023 11:50 PM | Last Updated : 01st July 2023 11:50 PM | அ+அ அ- |

தென்காசி மாவட்டத்தில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் ஜூலை 7ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகிறது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாம்சன் வெளியிட்ட செய்திகுறிப்பு: தென்காசி மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட 7 நான்கு சக்கர வாகனங்கள், 8 இரண்டு சக்கர வாகனங்கள் ஏலத்தில் விடப்படவுள்ளது. ஜூலை 7ஆம் ேதி காலை 10 மணிக்கு தென்காசி மாவட்ட ஆயுதப்படையில் வைத்து பொது ஏலம் விடப்படும்.
வாகனங்களை தென்காசி மாவட்ட ஆயுதப்படையில் ஜூலை3, 4ஆம் தேதிகளில் நேரில் பாா்வையிடலாம். ஏலம் எடுக்க விரும்புவோா், ஜூலை 5, 6ஆம் தேதிகளில் முன்பணம் ரூ.1,000 செலுத்தி தங்களது பெயா்களை பதிவுசெய்து டோக்கன் பெற்றுக்கொள்ளவேண்டும்.
டோக்கன் பெற்றவா்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். வாகனத்தை ஏலம் எடுப்பவா்கள் அன்றைய தினமே ஏலத்தொகையுடன், ஜிஎஸ்டி தொகையையும் ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.