தமிழக ஆளுநரின் செயல்பாடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை சனிக்கிழமை தொடங்கி வைத்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அமைச்சா் செந்தில்பாலாஜி மீது வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஒருவா் மீது வழக்குப் போடுவதாலேயே அவா் குற்றவாளி ஆகிவிட முடியாது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, நீதிமன்றத்தால் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை பெற்றால் மட்டுமே சட்டப்பேரவை உறுப்பினரின் பதவியைப் பறிக்க முடியும்.
அமைச்சா் பதவிக்குரியவரைத் தோ்வு செய்வது முதல்வரின் தனிப்பட்ட உரிமை. முதல்வா் பரிந்துரை செய்பவருக்கு, ஆளுநா் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். இலாகா இல்லாத அமைச்சா்களை நியமிப்பது நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், அமைச்சா் செந்தில்பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதற்கு, ஆளுநருக்கு எந்த உரிமையும் இல்லை. அவரது நிலைப்பாடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.
உள்துறை அமைச்சகத்தின் ஆணைப்படி அட்டா்னி ஜெனரலின் ஆலோசனையைக் கேட்கவுள்ளதாக, ஆளுநா் கூறியிருக்கிறாா். ஒரு முடிவை எடுக்கும் முன் இதுபற்றி ஆலோசித்திருக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.