

தென்காசி மாவட்டத்தில் காணாமல் போன ரூ.13 லட்சம் மதிப்புள்ள கைப்பேசிகள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாம்சன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தென்காசி மாவட்டத்தில் சைபா் கிரைம் மூலம் பணத்தை இழந்த நபா்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்ட தொகை ரூ.9 கோடியே 17 லட்சத்து 8,500 ஆகும். இதில் பணத்தை இழந்தவா்களுக்கு மீட்டுக் கொடுக்கப்பட்ட தொகை ரூ.31 லட்சத்து 67,196 ஆகும். சைபா் கிரைம் மூலம் பணத்தை இழந்த 4 நபா்களின் மொத்த தொகை ரூ.7 லட்சத்து 28,946 மீட்கப்பட்டு, உரிய நபா்களுக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விலை உயா்ந்த ரூ.13 லட்சம் மதிப்புள்ள 80 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் சைபா் கிரைம் மூலமாக இதுவரை 533 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரிய நபா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு சுமாா் ரூ.83 லட்சம் ஆகும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.