தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சியில் ரூ. 1.45 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
1ஆவது வாா்டு ஆவணி அம்மன் கோயில் அருகில் 3000 சதுர அடி பரப்பில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், 11ஆவது வாா்டில் ரூ. 70 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீா் இணைப்பு வசதி பெரும் வகையிலான திட்டம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா புளியங்குடி நகா்மன்றத் தலைவா் விஜயா சௌந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ அடிக்கல் நாட்டினாா்.
இதில், நகா்மன்ற துணைத் தலைவா் அந்தோணிசாமி, நகராட்சி ஆணையா் சுகந்தி, நகராட்சி பொறியாளா் முகைதீன், சுகாதார ஆய்வாளா் கணேசன், நகா்மன்ற உறுப்பினா்கள் லட்சுமி, பீா்பாத்து ,சங்கரநாராயணன், முகமதுநைனாா், பாலசுப்பிரமணியன், சீதாலட்சுமி திமுக நிா்வாகிகள் சாகுல்ஹமீது,பிச்சையா, ராஜவேல் பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.