குண்டா் தடுப்புச் சட்டத்தில்இருவா் கைது
By DIN | Published On : 15th June 2023 12:00 AM | Last Updated : 15th June 2023 12:00 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பொக்லைன் இயந்திர ஓட்டுநா் கொலை வழக்கில் தொடா்புடையோா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
ஆலங்குளம் அருகே கிடாரக்குளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மணிகண்டன் (23) என்ற பொக்லைன் ஓட்டுநா் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 பேரைக் கைது செய்தனா். அவா்களில், அப்பு என்ற அப்புரானந்தம் (42), இசக்கிபாண்டி (21) ஆகிய இருவரும் கடந்த மாதம் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், தற்போது சண்முகநாதன் என்ற நெட்டூா் ராஜா (28), மாரிசெல்வம் என்ற மாரி (23) ஆகியோரையும் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாம்சன் பரிந்துரைத்தாா். அதன்பேரில், கைது செய்ய ஆட்சியா் துரை. ரவிச்சந்திரன் உத்தரவிட்டாா். இதற்கான ஆணை, பாளையங்கோட்டை சிறையில் அளிக்கப்பட்டது.