சாலையில் சிதறிக் கிடந்த ரூ. 1.80 லட்சத்தை மீட்டு போலீஸில் ஒப்படைத்த இளைஞா்
By DIN | Published On : 15th June 2023 12:00 AM | Last Updated : 15th June 2023 12:00 AM | அ+அ அ- |

ஆலங்குளத்தில் சாலையில் சிதறிக்கிடந்த ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்தை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா்.
ஆலங்குளம் பிரதான சாலை டாஸ்மாக் அருகில் வேகத்தடை ஒன்று உள்ளது. இதனருகில் செவ்வாய்க்கிழமை இரவு கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்தனவாம். அதைப் பாா்த்த சிலா் அவற்றை போட்டிப் போட்டுக் கொண்டு எடுத்துச் செல்ல தொடங்கினா்.
அப்போது, அவ்வழியே பைக்கில் குடும்பத்தினருடன் வந்த சாலைப்புதூா் கிராமத்தைச் சோ்ந்த ஜெயபிரகாஷ் என்பவா், அந்த நபா்களிடமிருந்து பணத்தை மீட்டு ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அதனைப் பெற்றுக் கொண்ட போலீசாா் அவரைப் பாராட்டினா். மேலும், பணத்தை தவற விட்ட பாவூா்சத்திரம் வியாபாரியிடம் போலீஸாா் புதன்கிழமை அந்த பணத்தை ஒப்படைத்தனா்.