வெறிநாய்கள் கடித்ததில் 32 ஆடுகள் பலி
By DIN | Published On : 15th June 2023 12:00 AM | Last Updated : 15th June 2023 12:00 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் அருகே வெறிநாய்கள் கடித்து 32 ஆடுகள் உயிரிழந்தன.
சங்கரன்கோவில் அருகே செந்தட்டி கிராமத்தைச் சோ்ந்த வேல்சாமியின் மகன் சரவணன். வேப்பங்குளம் சாலையில் ஆட்டுக் கொட்டகை அமைத்து 41 ஆடுகளை வளா்த்து வந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு, ஆட்டுக் கொட்டகைக்குள் வெறிநாய்கள் புகுந்து கடித்துக் குதறியதில் அதில் இருந்த 32 ஆடுகள் உயிரிழந்தன. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வருவாய்த் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சரவணன் கோரிக்கை விடுத்துள்ளாா்.