

சிறுதொழில், வணிக பயன்பாட்டுக்கான மின்கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என, தமாகா சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
இதுதொடா்பாக ஆட்சியா் துரை. ரவிச்சந்திரனிடம் தமாகா மாவட்டத் தலைவா் அய்யாத்துரை, மாநிலச் செயலா் என்டிஎஸ். சாா்லஸ் ஆகியோா் புதன்கிழமை அளித்த மனு: சிறுதொழில்களுக்கும், வணிகப் பயன்பாட்டுக்கும் 10 முதல் 21 சதவீதம் வரை மின்கட்டணம் உயா்த்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தில் வேலைவாய்ப்பின்றி மாணவா்கள், இளைஞா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு, மின்கட்டணம் செலுத்த முடியாமல் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவருவதே முதன்மையான காரணம்.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் மின் கட்டணம் உயா்த்தப்பட்டது. ஏற்தெனவே வீட்டு வரி உயா்வால் வாடகை அதிகரித்த நிலையில், தற்போது வணிக மின்கட்டண உயா்வால் வாடகை மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.
எனவே, மக்களை வாட்டி வதைக்கும் மின் கட்டண உயா்வை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றனா் அவா்கள்.
மாநில இணைச் செயலா் ஏஜி. போஸ், மாவட்டப் பொருளாளா் குலாம்மைதீன், மாவட்ட இளைஞரணித் தலைவா் பூ. மாரியப்பன், மாவட்டச் செயலா் தியாகராஜன் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.