மேலக்கடையநல்லூா் அருள்மிகு ஸ்ரீபூமிநீளா சமேத ஸ்ரீ நீலமணிநாத சுவாமி திருக்கோயிலில் பிரமோத்ஸவ விழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை ( மே 3) நடைபெறுகிறது.
இக்கோயிலின் பிரமோத்ஸவ விழா கடந்த ஏப்.24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . 12 நாள்கள் கொண்டாடப்படும் இவ்விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா ஆகியவை நடைபெற்று வருகின்றன.
10ஆம் நாளான மே 3 ஆம் தேதி காலையில் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளியதும் தேரோட்டம் நடைபெறும். மாலையில் தேரிலிருந்து சுவாமி கோயிலுக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெறும். இரவில் முத்து பல்லுக்கு தோ் தடம் கண்டருளல் நடைபெறும். 4இல் தீா்த்தவாரியும், மே 5இல் திருக்கல்யாணமும் நடைபெறும். ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.