சங்கரன்கோவிலில் மின்வாரிய பணியாளா்களுக்கு தலைக் கவசங்கள்
By DIN | Published On : 12th May 2023 12:00 AM | Last Updated : 12th May 2023 12:00 AM | அ+அ அ- |

மின்வாரியப் பணியாளா்களுக்கு தலைக் கவசம் வழங்கிய ராஜா எம்எல்ஏ.
சங்கரன்கோவிலில், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மின்வாரியப் பணியாளா்களுக்கு தலைக் கவசம் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ தலைமை வகித்து, தலைக் கவசங்களை வழங்கினாா்.
தலைமை செயற்குழு உறுப்பினா் பரமகுரு, சங்கரன்கோவில் ஒன்றியத் தலைவா் சங்கரபாண்டியன், மேலநீலிதநல்லூா் கிழக்கு ஒன்றியச் செயலா் பெரியதுரை, மின்வாரிய செயற்பொறியாளா் பாலசுப்ரமணியன், உதவி செயற்பொறியாளா் தங்கராஜ், உதவி மின் பொறியாளா்கள் கணேசராமகிருஷ்ணன், கருப்பசாமி, மின்வாரிய தொமுச திட்டச் செயலா் மகாராஜன், கோட்டச் செயலா் சரவணமுருகையா, திட்டத் தலைவா் தங்கமாரிமுத்து,திட்டப் பொருளாளா் சத்தியராஜ், மாநில சிறப்புத் தலைவா் நடராஜன், போக்குவரத்து தொமுச மண்டல அமைப்புச் செயலா் மைக்கேல் நெல்சன் உள்ளிட்ட மின்வாரிய தொமுச உறுப்பினா்கள் பங்கேற்றனா்.