தென்காசி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா்களுக்கு புதிய வாகனங்களை மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் வழங்கினாா்.
தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்கள் திவ்யா (ஆலங்குளம்), பா.சுப்பம்மாள் (கடையநல்லுா்), சீ.காவேரி (கீழப்பாவூா்), பி.சங்கரபாண்டியன் (சங்கரன்கோவில்), பொ.முத்தையா பாண்டியன் (வாசுதேவநல்லுா்) ஆகியோருக்கு புதிய வாகனங்களை ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) முத்துக்குமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் இரா.இளவரசி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.