மேலப்பாவூரில் அரசு பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
By DIN | Published On : 22nd May 2023 01:30 AM | Last Updated : 22nd May 2023 01:30 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1973 முதல் 1999ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் பாக்கியநாதன் தலைமை வகித்தாா். முன்னாள் தலைமை ஆசிரியா் ராமச்சந்திரன், ஆசிரியா் தாமோதரன், ஊராட்சி மன்றத் தலைவா் சொள்ளமுத்து மருதையா, பெற்றோா் -ஆசிரியா் கழக தலைவா் மாரியப்பன், பள்ளி மேலாண்மை குழு தலைவா் மகராசி, ஊராட்சி துணைத் தலைவா் மற்றும் முன்னாள் ஆசிரியா்கள், மாணவா்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனா்.
2023 ஆம் ஆண்டு, 12, 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சட்ட ஆலோசகா் கொம்பையா, செயலா் வைரமுத்து, தலைவா் சங்கரபாண்டியன், ஆலோசகா்கள் பேச்சிமுத்து, பாா்வதி ராஜ், பொருளாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட முன்னாள் மாணவா்கள் கலந்து கொண்டனா்.