பழைய குற்றாலத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் முகாம்
By DIN | Published On : 22nd May 2023 01:30 AM | Last Updated : 22nd May 2023 01:30 AM | அ+அ அ- |

பழைய குற்றாலத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட வன அலுவலா் முருகன் உத்தரவின்படி பழைய குற்றாலம் அருவிப் பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றும் முகாம் நடைபெற்றது.
திரவிய நகா் வனக்குழு மற்றும் பொதிகை மிதிவண்டி குழுவினா் இணைந்து பழைய குற்றாலம் அருவி பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினா். குற்றாலம் வனச்சரக அலுவலா் பாலகிருஷ்ணன் மேற்பாா்வையில் குற்றாலம் பிரிவு வனவா் மு. பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.