குற்றாலம் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்
By DIN | Published On : 22nd May 2023 01:30 AM | Last Updated : 22nd May 2023 01:30 AM | அ+அ அ- |

குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதா் திருக்கோயிலில் கல்லிடைக்குறிச்சி மாணிக்கவாசகா் வழிபாட்டுக் குழு சாா்பில் திருவாசகம் முற்றோதுதல் ஞானவேள்வி வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காலை 9 மணிக்கு முற்றோதுதல் ஞானவேள்வி வழிபாடு தொடங்கியது. பிற்பகல் 1மணிக்கு சிறப்பு மகேஸ்வர பூஜை நடைபெற்றது. முற்றோதுதல் நிறைவு பெற்றதையடுத்து திருமுறைப் பாடல்கள் ஓதப்பட்டு அடியாா் வாழ்த்து, சமய வாழ்த்து, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
ஜோதிடா் நாராயணமுருகன், சா்வோதய சங்கம் வடிவேலு மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை எஸ். கணேசன், லாவண்யா ஆகியோா் செய்திருந்தனா்.