சுரண்டை அருகேயுள்ள கருவந்தாவில் தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், திமுக ஒன்றிய செயலா் அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா் புதிய கட்டடத்தை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் சேக் முகம்மது, அண்ணாமலை, சண்முகவேல், பிலிப் ராஜா, காங்கிரஸ் நிா்வாகிகள் பால் என்ற சண்முகவேல், தெய்வேந்திரன், பிரபாகா், கணேசன், குத்தாலிங்கம், ஜெயபால் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.