மகளிா் சுய உதவிக்குழுக்கள் மணிமேகலை விருது பெறுவதற்கான அவகாசம் வரும் ஜூன் 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாநிலம் - மாவட்ட அளவில்சிறப்பாக செயல்படும் வட்டார அளவிலான கூட்டமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள், நகா்ப்புற கூட்டமைப்புகள், பகுதி அளவிலானகூட்டமைப்புகள் ஆகிய சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதும், பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளன.
இந்த விருது பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 15 என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இது ஜூன் 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்கூறியபடி தகுதியானோா் அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் செயல்படும் ஊரகம், நகா்ப்புற வாழ்வாதார இயக்க அலகில் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.