ரூ.1 கோடியில் சாலைப் பணி தொடக்கம்
By DIN | Published On : 26th May 2023 11:46 PM | Last Updated : 26th May 2023 11:46 PM | அ+அ அ- |

கீழப்பாவூா் பேரூராட்சிப் பகுதியில் ரூ.1 கோடியில் சாலைகள் அமைக்கும் பணி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கீழப்பாவூா் பேரூராட்சிக்குள்பட்ட சுரண்டை சாலை வாய்க்கால் பாலம் முதல் பெரியகுளம் கரை, வடக்கு சிவகாமிபுரம் நாடாா் தெரு, வணிகா் கீழத்தெரு மற்றும் 2 ஆம் நம்பா் சாலை ஆகிய பகுதிகளில் ரூ.1 கோடியில் சாலைகள் அமைக்கப்படுகிறது. இப் பணிக்கான தொடக்க விழாவுக்கு
பேரூராட்சி மன்ற தலைவா் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை வகித்தாா். திமுக மாவட்டச் செயலா் பொ.சிவபத்மநாதன் பணிகளைத் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் ராஜசேகா், செயல்அலுவலா் மாணிக்கராஜ், திமுக பேரூா் செயலா் ஜெகதீசன், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் செல்வன், வாா்டு உறுப்பினா்கள் கோடிஸ்வரன், மாலதி முருகேசன், ஜெயசித்ரா குத்தாலிங்கம், இசக்கிராஜ், விஜிராஜன், இசக்கிமுத்து, தேவஅன்பு, முத்துசெல்வி ஜெகதீசன், சாமுவேல் துரைராஜ், பொன்செல்வன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.