மது விற்பனையில் ஈடுபட்டவா் கைது
By DIN | Published On : 07th November 2023 02:23 AM | Last Updated : 07th November 2023 02:23 AM | அ+அ அ- |

கடையநல்லூா்: புளியங்குடி அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
சொக்கம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் உடையாா்சாமி தலைமையான போலீஸாா் சிங்கிலிபட்டி பகுதியில் ரோந்து மேற்கொண்டிருந்தனா். அப்போது விற்பனைக்காக மது பாட்டில்களை வைத்திருந்த சிந்தாமணிபுதூா் பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்த இசக்கித்துரையை கைது செய்து அவரிடமிருந்து 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...