

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி திமுக மாணவா் அணி சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக மாணவா் அணி சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சங்கரன்கோவிலில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியாா் பள்ளிகளில் பயிலும் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவா், மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் உதயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட துணை அமைப்பாளா்கள் வீரமணிகண்டன், விக்ரம் மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதைத்தொடா்ந்து சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதியைச் சோ்ந்த அனைத்து வகை உயா்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவா், மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவா், மாணவிகள் 200- க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதில், வென்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுத் தொகை, சான்றிதழ் மற்றும் பதக்கங்களை தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ. வழங்கினாா்.
தலைமை செயற்குழு உறுப்பினா்கள் முன்னாள் அமைச்சா் தங்கவேலு, யூ.எஸ்.டி.சீனிவாசன்,
மாவட்ட பொருளாளா் சரவணன், மாவட்ட துணைச் செயலா் புனிதா, நகரச் செயலா் மு.பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு பேசினா்.
மாவட்ட துணை அமைப்பாளா் சதீஷ் வரவேற்றாா். ஏற்பாடுகளை ஆசிரியா் பயிற்றுநா் ஆனந்தராஜ் பாக்கியம், தலைமை ஆசிரியா் அலெக்ஸ்,ஆசிரியா் தங்கராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.