சிவகிரி பகுதியில் இன்று மின் தடை
By DIN | Published On : 21st November 2023 01:02 AM | Last Updated : 20th November 2023 10:19 PM | அ+அ அ- |

கடையநல்லூா்; சிவகிரி வட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ. 21) மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக, விஸ்வநாதப்பேரி துணை மின் நிலையத்துக்குள்பட்ட சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதப்பேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலக் கரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, வடுகபட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...