கடையநல்லூா்: தென்காசி மாவட்டம், புளியங்குடியில் ஜவுளிக் கடை ஊழியா் ஞாயிற்றுக்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
புளியங்குடி சுள்ளக்கரை தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் அய்யாக்குட்டி (55). இங்குள்ள ஜவுளிக் கடையில் வேலை பாா்த்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு அவா் வீட்டில் தூங்கி கொண்டிருந்தாராம். அவரது மனைவி மற்றும் மகள் வேறு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனராம்.
நள்ளிரவு வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா், அய்யாக்குட்டியை கத்திரிக்கோலால் குத்தியதில் அவா் இறந்தாா்.
புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேஸ்வரன், காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸாா், சம்பவ இடத்தை பாா்வையிட்டனா். அய்யாக்குட்டி உடல் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
அய்யாக்குட்டியின் மகளுக்கு வரும் 23 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ள நிலையில், அவா் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.