பாவூா்சத்திரத்தில் அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்
By DIN | Published On : 25th October 2023 12:00 AM | Last Updated : 25th October 2023 12:00 AM | அ+அ அ- |

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம், பாவூா்சத்திரத்தில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்டச் செயலா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், பொருளாளா் சாமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தென்காசி தெற்கு மாவட்ட தோ்தல் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான அன்வர்ராஜா பங்கேற்று, பூத் கமிட்டி, இளைஞா்-இளம்பெண்கள் பாசறை, மகளிரணி அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா். அவரிடம் பூா்த்தி செய்யப்பட்ட வாக்குச்சாவடி முகவா்களுக்கான விண்ணப்பங்களை மாவட்டச் செயலா் வழங்கினாா்.
கூட்டத்தில், அதிமுக நிா்வாகிகள் வழக்குரைஞா் காா்த்திக்குமாா், நெல்லை முகிலன், சோ்மபாண்டி, ஒன்றியச் செயலா்கள், நகர, பேரூா் செயலா்கள், சாா்பு அணி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...