வென்னிமலை முருகன் கோயிலில் நவராத்திரி சிறப்பு பூஜை
By DIN | Published On : 25th October 2023 12:00 AM | Last Updated : 25th October 2023 12:00 AM | அ+அ அ- |

நவராத்திரி விழாவையொட்டி, பாவூா்சத்திரம் பகுதியை சோ்ந்த மாண- மாணவிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 9 கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து பரத நாட்டியம் ஆடினா்.
நட்சத்ரா பரதநாட்டிய மையத்தின் ஒருங்கிணைப்பில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரா் கோயிலில் முதல்நாள் நிகழ்ச்சியை நடத்தினா். தொடா்ந்து, தாம்பரம் செல்லியம்மன் கோயில், திருவெற்றியூா் வாடி உடையம்மன் கோயில், மணிமங்கலம் சிவன் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், மேட்டுப்பாளையம் தென்திருப்பதி கோயில், ஆலங்குளம் ராமா் மலைக்கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆகியவற்றின் நடனம் ஆடினா்.
9ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோவியில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி நாட்டியமாடினா். இம்மாணவ, மாணவிகளை பக்தா்கள், பொதுமக்கள் பாராட்டினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...