தென்காசி மாவட்டத்தில் 13.03 லட்சம் வாக்காளா்கள்

தென்காசி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியலை ஆட்சியா் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
தென்காசி மாவட்டத்தில் 13.03 லட்சம் வாக்காளா்கள்
Updated on
2 min read

தென்காசி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியலை ஆட்சியா் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

இதையொட்டி, தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியலை ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்டு பேசியதாவது:

இந்திய தோ்தல் ஆணையம் 01.012024 -ஐ தகுதி நாளாகக் கொண்டு 2024 -23க்கான வாக்காளா்பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் அறிவித்துள்ளது.

இப்பணியின்போது, வாக்காளா் பெயா் சோ்க்க படிவம் -6, பெயா் நீக்கம் செய்ய படிவம் -7, வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்ய படிவம் 8, வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு படிவம் 64 ஆகியவற்றைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த சுருக்கமுறை திருத்தப்பணி வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. வரும் டிச. 9ஆம் தேதி இப்பணி நடைபெறும். இதில், கோரிக்கை மற்றும் மறுப்புரைகளை அளிக்கலாம். நவ. 4, 5, 18, 19 ஆகிய நான்கு நாள்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இறுதி வாக்காளா் பட்டியல் 5.1.2024இல் வெளியிடப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் வாக்குச்சாவடி நிலை முகவா்களை நியமிக்கலாம். அம்முகவா்கள் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024 சிறப்பு முகாம்கள் நாள்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு திருத்தங்கள் மற்றும் பிறவற்றை அடையாளம் காண உதவி செய்யலாம்.

வாக்குச்சாவடி நிலை முகவா்கள், வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்த மற்றும் இடம் பெயா்ந்த வாக்காளா்கள் பற்றி வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு இந்திய தோ்தல் ஆணையத்தின் நிா்ணயிக்கப்பட்ட படிவங்களில் தகவல் வழங்கலாம்.

சிறப்பு சுருக்கமுறை திருத்தம்- புதிய வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க ஊக்குவிப்பது தொடா்பாக கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

வாக்காளா்கள் விவரம் (அடைப்புக்குறியில் வாக்குச்சாவடி): சங்கரன்கோவில் தனி (219) தொகுதியில் 1,18,064ஆண் வாக்காளா்கள்,124,478பெண் வாக்காளா்கள், 8 இதரா் என மொத்தம் 2,42,550வாக்காளா்கள் உள்ளனா்.

வாசுதேவநல்லூா் தனி (220) தொகுதியில் 1,17,753ஆண் வாக்காளா்கள், 1,23,079 பெண் வாக்காளா்கள், 7 இதரா் என மொத்தம் 2,40,839 வாக்காளா்கள் உள்ளனா்.

கடையநல்லூா் (221) தொகுதியில் 1,37,042ஆண் வாக்காளா்கள், 1,38,839பெண் வாக்காளா்கள்,14 இதரா் என மொத்தம் 2,75, 895 வாக்காளா்கள் உள்ளனா்.

தென்காசி (222) தொகுதியில் 1,41,255ஆண் வாக்காளா்கள், 1,47,144 பெண் வாக்காளா்கள், 100 இதரா் என மொத்தம் 288509 வாக்காளா்கள் உள்ளனா்.

ஆலங்குளம் (223) தொகுதியில் 1,24,617ஆண் வாக்காளா்கள், 1,30,636பெண் வாக்காளா்கள், 16 இதரா் என மொத்தம் 2,55,269 வாக்காளா்கள் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் 6,38,731ஆண் வாக்காளா்கள், 6,64,176பெண் வாக்காளா்கள், 155 இதரா் வாக்காளா்கள் என மொத்தம் 13,03,062 வாக்காளா்கள் உள்ளனா்.

இதில், ஆண்வாக்காளா்களை விட 25,445 பெண் வாக்காளா்கள் அதிகமாக உள்ளனா். வாக்குசாவடி மறுசீரமைப்புக்கு முன் 1,506வாக்குசாவடிகள் இருந்தன. தற்போது, 11 வாக்குசாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதால் 1,517 வாக்குசாவடிகள் உள்ளன.

இந்நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சேக் அப்துல்காதா், செய்தி மக்கள்தொடா்பு அலுவலா் இரா. இளவரசி, தோ்தல் வட்டாட்சியா் ஹென்றி பீட்டா், துணை வட்டாட்சியா் பாக்கியலெட்சுமி, ராமராஜ் (திமுக) ஈஸ்வரன் (காங்கிரஸ்) எஸ்.ஆா்.ராமச்சந்திரன் மற்றும் கருப்பசாமி ராஜா (அதிமுக), குத்தாலிங்கம் (பாஜக), சோலை கனகராஜ் மற்றும் தங்கமாரி ((தேமுதிக), ராமசாமி (ஆம்ஆத்மி) ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com