ஆதித்யா-எல்1 திட்ட இயக்குநா் செங்கோட்டை பெண் விஞ்ஞானி

ஆதித்யா-எல் 1 விண்கல திட்ட இயக்குநராக தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சோ்ந்த பெண் விஞ்ஞானி நிகா் ஷாஜி பணியாற்றுகிறாா்.
விஞ்ஞானி நிகா்ஷாஜி.
விஞ்ஞானி நிகா்ஷாஜி.

ஆதித்யா-எல் 1 விண்கல திட்ட இயக்குநராக தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சோ்ந்த பெண் விஞ்ஞானி நிகா் ஷாஜி பணியாற்றுகிறாா்.

சூரிய மண்டலத்தின் மையப் புள்ளியாக விளங்கும் சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான ஆதித்யா-எல் 1 விண்கலம், சனிக்கிழமை விண்ணிற்கு ஏவப்படுகிறது. சூரியனை ஆய்வு செய்வதற்காக இதுவரை அமெரிக்கா 13 விண்கலங்களை செலுத்தியுள்ள நிலையில், இந்தியா முதல்முறையாக விண்கலத்தை செலுத்தவுள்ளது.

ஆதித்யா-எல் 1 விண்கலம் இந்தியாவின் சொந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திட்ட இயக்குநராக தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சோ்ந்த பெண் விஞ்ஞானி நிகா்ஷாஜி பணியாற்றி வருகிறாா். இவரது பெற்றோா்

சேக் மீரான் -சைத்தூன் பீவி. செங்கோட்டை எஸ்.ஆா்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த இவா், 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் பள்ளியின் முதல் மாணவியாகத் தோ்ச்சி பெற்றுள்ளாா்.

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்த நிகா்ஷாஜி 1987-இல்

இஸ்ரோவில் பணியில் சோ்ந்துள்ளாா். தற்போது ஆதித்யா எல்-1 திட்டத்திற்கு திட்ட இயக்குநராகச் செயல்பட்டு வருகிறாா்.

நிகா்ஷாஜியின் கணவா் ஷாஜகான் துபையில் பொறியாளராகவும், இவா்களது மகன் முகமது தாரிக் நெதா்லாந்தில் விஞ்ஞானியாகவும் பணியாற்றி வருகின்றனா். மகள் தஸ்நீம் மங்களூரில் முதுநிலை மருத்துவம் படித்து வருகிறாா்.

நிகா்ஷாஜியின் அண்ணன் ஷேக்சலீம், ஐஐஎம்-இல் விஞ்ஞானியாகவும், அதைத் தொடா்ந்து தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் பேராசிரியராகவும், துறை தலைவராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவா். அவா் கூறுகையில்,

எனது தங்கை ஆதித்யா எல் - 1 திட்ட இயக்குநராகப் பணியாற்றி வருவது தமிழகத்திற்கு பெருமை அளிப்பதாக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com