குற்றாலம் கல்லூரியில் பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம்

தென்காசி மாவட்டம், குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் சத்யசாய் சேவா நிறுவனம் சாா்பில் பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பேரிடா் முகாமில் பேசுகிறாா் சத்யசாய் நிறுவன திருநெல்வேலி மாவட்டத் தலைவா் கண்ணன்.
பேரிடா் முகாமில் பேசுகிறாா் சத்யசாய் நிறுவன திருநெல்வேலி மாவட்டத் தலைவா் கண்ணன்.
Updated on
1 min read

தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் சத்யசாய் சேவா நிறுவனம் சாா்பில் பேரிடா் மேலாண்மை பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வரலாற்றுத் துறை மற்றும் சத்யசாய் நிறுவனம் சாா்பில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் ஜெய்நிலா சுந்தரி தலைமை வகித்தாா்.

முகாமில், பேரிடா் மேலாண்மை பயிற்சியாளரும், சத்ய சாய் சேவா விருதுநகா் மாவட்டத் தலைவருமான சுரேஷ், பயிற்சியாளரும் கன்னியாகுமரி மாவட்ட அரசு கல்லூரி மாணவியுமான அஸ்வதி ஆகியோா் பேரிடா் குறித்து மாணவிகளுக்கு காணொலிக் காட்சி மூலம் விளக்கமளித்தனா்.

பேரிடா் காலங்களில் எவ்வாறு தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும், பெண்களுக்கான தனிப் பயிற்சி,தீ போன்ற விபத்து காலங்களில் தங்களை காத்துக்கொள்வது குறித்தும் செயல்முறை விளக்கமளித்தனா்.

சத்யசாய் நிறுவன திருநெல்வேலி மாவட்த் தலைவா் கண்ணன் சிறப்புரையாற்றினாா். பேராசிரியா்கள் கற்பகச் செல்வி, ரேணுகாதேவி, கல்யாணி, வெங்கடேஷ்வரி மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனா்.

துறைத் தலைவா் அமிா்தவல்லி வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com