இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் ரூ. 66 லட்சத்தில் சாலை குடிநீா் வசதி

சங்கரன்கோவில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் ரூ.66 லட்சத்தில் சாலை மற்றும் குடிநீா் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
Published on

சங்கரன்கோவில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் ரூ.66 லட்சத்தில் சாலை மற்றும் குடிநீா் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் ரூ.56 லட்சம் மதிப்பில் சாலை மற்றும் உள் கட்டமைப்பை மேம்படுத்துதல், ரூ.10 லட்சம் மதிப்பில் மோட்டாா், சேமிப்புத் தொட்டியுடன் கூடிய குடிநீா் வழங்கும் பணி என மொத்தம் ரூ.66 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ. தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

இதில், நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, நகராட்சி பொறியாளா் இா்வின்ஜெயராஜ், மேற்பாா்வையாளா் காந்திவேலுச்சாமி, வாா்டு செயலா் தங்கவேல், மாணவரணி வெங்கடேஷ், தகவல் தொழில்நுட்ப அணி சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com