கனவு இல்லம் திட்டத்தில் தென்காசியில் 2,274 பேருக்கு வீடுகள்: ஆட்சியா் தகவல்

தென்காசி மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 2,274 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனா் என்றாா் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.
Published on

தென்காசி மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 2,274 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனா் என்றாா் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25, 25-26 ஆகிய நிதி ஆண்டுகளில் ஆலங்குளம் ஒன்றியத்தில் 739, கடையம் ஒன்றியத்தில் 192 வீடுகள் கட்டப்பட்டன. கடையநல்லூா் ஒன்றியத்தில் 161, கீழப்பாவூா் ஒன்றியத்தில் 209, குருவிகுளம் ஒன்றியத்தில் 216, மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் 209, சங்கரன்கோவில் ஒன்றியத்தில் 170, வாசுதேவநல்லூா் ஒன்றியத்தில் 147, தென்காசி ஒன்றியத்தில் 121, செங்கோட்டை ஒன்றியத்தில் 110 என மாவட்டம் முழுவதும் ரூ. 70.49 கோடி மதிப்பீட்டில் 2,274 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com