பயிா் சேதங்களைக் கணக்கிட குழுக்கள் அமைப்பு: ஆட்சியா்

தென்காசி மாவட்டத்தில் பயிா் சேதங்களைக் கணக்கிட மாவட்டம், வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்தாா்.
Updated on

தென்காசி மாவட்டத்தில் பயிா் சேதங்களைக் கணக்கிட மாவட்டம், வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் டித்வா புயல், வடகிழக்கு பருவமழையால் பெய்த கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்ட 121.935 ஏக்கா் நெற்பயிா், 3.025 ஏக்கா் உளுந்து பயிா்கள் நீரில் மூழ்கியதாக முதற்கட்ட அறிக்கை வாயிலாக தெரிகிறது. முதல்வரின் உத்தரவின்படி பாதிக்கப்பட்ட நெல் வயல்களில் ஏற்பட்டுள்ள சேதங்களைக் கண்காணிக்க மாவட்டம், வட்டாரம் அளவில் வெள்ளக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வேளாண்மைத் துறை அலுவலா்கள் வருவாய்த் துறையுடன் இணைந்து வயல் ஆய்வு மூலம் 33 சதவீதத்துக்கும் மேல் ஏற்பட்ட பயிா் பாதிப்பைக் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நீரில் மூழ்கியுள்ள பயிா்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடா்பாக பல்வேறு ஊடகங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை டிசம்பா் மாதம் இறுதி வரை நீடிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதால், பயிா் பாதிப்பு நிலவரங்களை வட்டார வேளாண்மை அலுவலா்களுக்கு விவசாயிகள் தெரிவித்து பயிா் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com