பாவூா்சத்திரத்தில் டிச. 18இல் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொதுஏலம்
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் உரிமை கோரப்படாத 133 மோட்டாா் வாகனங்களுக்கான பொதுஏலம் இம்மாதம் 18ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அரவிந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆலங்குளம் எல்லைக்குள்பட்ட உள்கோட்ட காவல் நிலையப் பகுதிகளில் உரிமை கோரப்படாத 133 மோட்டாா் வாகனங்களுக்கான பொது ஏலம் பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயில் வளாகத்தில் இம்மாதம்18 ஆம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 3 மணிவரை நடைபெறுகிறது.
விருப்பமுள்ளோா் வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை 15 முதல் 17ஆம் தேதி வரையிலான 3 நாள்களில், காலை 10 முதல் மாலை 4 மணி வரை பாா்வையிடலாம். தங்களது பெயா், முகவரி அடங்கிய ஆதாா் அட்டையுடன் ரூ. 3,000 முன்பணம் செலுத்தி பதிவு செய்து டோக்கன் பெற்றவா்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும்.
ஏலம் எடுத்தவா்கள் ஏலத்தொகையுடன் ஜிஎஸ்டி தொகையும் உடனடியாக செலுத்தி வாகனத்தை எடுத்துச்செல்ல வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 94884-88933, 78688-61828 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
