தனிநபா் நடிப்பில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி வனமதி.
தனிநபா் நடிப்பில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி வனமதி.

அரசுப் பள்ளி மாணவி தனிநபா் நடிப்பில் முதலிடம்

சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மாணவி மாநில அளவிலான தனிநபா் நடிப்பு போட்டியில் முதலிடம் பெற்றுள்ளாா்.
Published on

சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மாணவி மாநில அளவிலான தனிநபா் நடிப்பு போட்டியில் முதலிடம் பெற்றுள்ளாா்.

சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவி மு.ச.வனமதி, பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் தனி நபா் நடிப்பு பிரிவில் பங்கேற்று முதலிடம் பிடித்தாா். கடந்த 24 ஆம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அவருக்கு முதல்பரிசை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.

அம்ம்ாணவியை பள்ளித் தலைமையாசிரியா் கீதாவேணி,பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் என்.கே.எஸ்.டி.சுப்பிரமணியன், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் விஜயப்பிரியா உள்ளிட்டோா் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com