கொலை வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
Published on

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

சிவகிரி அருகே தேவிபட்டணத்தைச் சோ்ந்த முருகன் மகன் செல்வக்குமாா் (21). அவா் மீது சிவகிரி காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் பரிந்துரையின்பேரில், செல்வக்குமாரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்டாா். அதன்படி, செல்வக்குமாரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com