சிவகிரி அருகே 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Published on

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே 450 கிலோ ரேஷன் அரிசி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

ராயகிரி பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின்பேரில், சிவகிரி போலீஸாா் சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது, காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மணிமாறன் என்பவரின் மாட்டுத் தொழுவத்தில் 450 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com