ஆலங்குளத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
தென்காசிக்குச் செல்லும் வழியில் ஆலங்குளம் வந்த முதல்வருக்கு ஆலங்குளத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்காசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை ஆலங்குளம் வழியாகச் சென்றாா். அப்போது திமுக சாா்பில் அவருக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பேருந்து நிலையம் தொடங்கி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், மலைக்கோயில் வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோா் திரண்டு வரவேற்பு அளித்தனா்.
தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் வே. ஜெயபாலன், வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன், முன்னாள் அமைச்சா் டாக்டா் பூங்கோதை ஆலடி அருணா, சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவா் கௌசல்யா வெங்கடேசன் உள்பட பலா் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
முன்னதாக, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆலங்குளம் அரசுக் கல்லூரி மாணவிகள், முதல்வருடன் தற்படம் எடுத்தனா்.

