திருமணக்கோலத்தில் அருள்பாலித்த வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி.
தென்காசி
ஆலங்குளம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
ஆலங்குளம் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவின் ஒரு பகுதியாக திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆலங்குளம் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவின் ஒரு பகுதியாக திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடந்த 21 ஆம் தேதி கோயிலின் சஷ்டி விழா தொடங்கியது. நாள்தோறும் மூலவா், உற்சவருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. திங்கள்கிழமை காலை அலங்கார தீபாராதனை, மாலையில் சூரசம்ஹாரம் ஆகியவை நடைபெற்றன.
செவ்வாய்க்கிழமை (அக். 28) ஸ்ரீ தெய்வானை அம்பாளுக்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தவசுக் காட்சியளித்தாா். மாலையில் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இரவில் சப்பர பவனி நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா எம்.எஸ்.காமராஜ், நிா்வாகி ஆா்.ஆதித்தன், பக்தா்கள் செய்திருந்தனா்.

