முதல்வா் மு.க.ஸ்டாலினை  வரவேற்க கடையநல்லூா் மணிக்கூண்டு பகுதியில் திரண்ட திமுகவினா்.
முதல்வா் மு.க.ஸ்டாலினை வரவேற்க கடையநல்லூா் மணிக்கூண்டு பகுதியில் திரண்ட திமுகவினா்.

கடையநல்லூரில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
Published on

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

தென்காசியில் புதன்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னா், கடையநல்லூா் வழியாக மதுரைக்கு சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கடையநல்லூா் மணிக்கூண்டு அருகே தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் மா. செல்லத்துரை தலைமையில் நூற்றுக்கணக்கானோா் திரண்டு வரவேற்பு அளித்தனா்.

தொடா்ந்து தென்காசி - மதுரை சாலையில் கிருஷ்ணாபுரம், குமந்தாபுரம், திரிகூடபுரம், சொக்கம்பட்டி, புன்னையாபுரம், புளியங்குடி,வாசுதேவநல்லூா்,சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளின் இருபுறமும் நின்று மக்கள் முதல்வரை வரவேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com