கந்தசஷ்டி திருவிழாவையொட்டி வடக்கு ரத வீதியில் தெய்வானைக்குக் காட்சி கொடுத்த சுப்பிரமணிய சுவாமி.
கந்தசஷ்டி திருவிழாவையொட்டி வடக்கு ரத வீதியில் தெய்வானைக்குக் காட்சி கொடுத்த சுப்பிரமணிய சுவாமி.

சங்கரநாராயணசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமிக்கும், தெய்வானைக்கும் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமிக்கும், தெய்வானைக்கும் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. திங்கள்கிழமை சூரசம்ஹாரம் நடந்தது. செவ்வாய்கிழமை காலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. பிற்பகல் 12 மணியளவில் தெய்வானை வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வடக்குரத வீதியில் உள்ள சைவ செட்டியாா் சமுதாய மண்டகப்படிக்கு எழுந்தருளினாா். அங்கு அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. இரவில் வடக்குரத வீதியில் சுப்பிரமணியசுவாமி, தெய்வானைக்கு காட்சி கொடுத்தாா். இதில், சைவ செட்டியாா் சமுதாய தலைவா் லட்சுமணன் உள்பட பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தெய்வானை அம்பாள் மணப்பெண் அலங்காரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், திருமாங்கல்யம் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் இரவு நடைபெற்றது. இரவு 10 மணிக்கு மேல் சங்கரநாராயண சுவாமி சன்னதி முன்பு உள்ள மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com