சிவகிரி அருகே வேட்டையாட முயன்றவா் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவரை வனத்துறையினா் கைது செய்தனா்.
Published on

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவரை வனத்துறையினா் கைது செய்தனா்.

மாவட்ட வன அலுவலா் ராஜ்மோகன் உத்தரவின்பேரில், சிவகிரி வனச்சரகா் கதிரவன் தலைமையில் வனவா் குமாா், வனகாப்பாளா்கள் முருகன், அருண்மொழி பிரதீப், பெருமாள், வனக் காவலா்கள் ஆனந்தன், மாரியப்பன், வேட்டைத் தடுப்புக் காவலா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் அடங்கிய குழுவினா் கரிவலம்வந்தநல்லூா், பனையூா், சங்குபுரம் ஆகிய பகுதிகளில் ரோந்து மேற்கொண்டிருந்தனா்.

அப்போது, புளியங்குடியைச் சோ்ந்த ராஜன்பாபு மகன் செல்வசுந்தா் (28 ) வேட்டை நாய்களை வைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, வனத்துறையினா் அவரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com