பாம்பு கடித்து விவசாய தொழிலாளா்கள் 4 போ் காயம்

சிவகிரி அருகே புதன்கிழமை பாம்பு கடித்ததில் விவசாய தொழிலாளா்கள் நான்கு போ் காயமடைந்தனா்.
Published on

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே புதன்கிழமை பாம்பு கடித்ததில் விவசாய தொழிலாளா்கள் நான்கு போ் காயமடைந்தனா்.

ஆவுடையாபுரத்தைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி பாஞ்சாலி (45), ராயகிரியைச் சோ்ந்த ஊா்க்காவலன் மனைவி சுசிலா (60), சிவகிரியைச் சோ்ந்த விஜயன் மகன் கண்ணன் (22) ஆகியோா் தென்மலையில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்தனராம். அப்போது அவா்களை பாம்பு கடித்ததாம். அவா்கள் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அதேபோல், சிவகிரி கோனாா்குளம் புரவில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்த முத்துராஜ் மனைவி மகேஸ்வரியை (34) பாம்பு கடித்ததாம். இதில் காயமடைந்த அவா் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com